Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM

நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை

மத்திய ஜவுளித் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் நூல் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜவுளி நிறுவனங்கள் மூடப்படுவது டன், வேலையிழப்பு ஏற்படும்.

இறக்குமதி வரி 11 சதவீதம்

மத்திய அரசின் 2021-22 பட்ஜெட்டில் 5% அடிப்படை சுங்க வரி, 5%விவசாய உட்கட்டமைப்பு மேம்பாட்டு வரி மற்றும் 10% சமூக நலவரி விதிக்கப்பட்டதால், ஒட்டுமொத்த இறக்குமதி வரி 11 சதவீதமாக உயர்ந்ததே பருத்தி விலை ஏற்றத்துக்கான முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.

எனவே, ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மின்னணு ஏலத்தில் பங்கு பெற வசதியாக, வணிகவிதிமுறைகள், நிபந்தனைகளை சீரமைக்க வேண்டும்.

உச்சபட்ச பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச்வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x