TNadu
திண்டுக்கல்லில் மழையால் பாதிப்பு தக்காளி, கத்திரி, முருங்கை கிலோ ரூ.100 :
திண்டுக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை வழக்கத்தைவிட 25 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. இதனால் காய்கறிச் செடி பயிரிட்டுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கி செடிகள் சேதமாகி உள்ளன. எனவே அனைத்து காய்கறிகளும் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.
பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், வடமதுரை ஆகிய பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படும் தக்காளி செடிகள் மழையால் சேதமடைந்தன. இதனால் தக்காளி பழங்கள் செடியிலேயே வெடித்துள்ளன. எனவே தக்காளி விலை ஒரு வாரமாக உயர்ந்து வருகிறது. நேற்று ஒரு கிலோ தக்காளி வெளி மார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ. 100 வரை விற்பனையானது. கத்திரி ரூ.95 முதல் ரூ.100 வரை விற்றது. வெண்டைக்காய் - ரூ. 65, புடலை-ரூ.44, அவரை-ரூ.100, முருங்கை-ரூ.100, பீட்ரூட்- ரூ.45, கேரட்- ரூ.60 விலைக்கு விற்பனையானது.
