Published : 29 Oct 2021 03:09 AM
Last Updated : 29 Oct 2021 03:09 AM

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் - கனகராஜ் சகோதரருக்கு5 நாள் போலீஸ் காவல் :

உதகை

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாககனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை நீலகிரி மாவட்ட காவல் துறையினர் கடந்த 25-ம் தேதி கைது செய்தனர்.

தனபாலை, 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் போலீஸார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நேற்று நடந்தது. இதற்காக கூடலூரில் சிறையில் இருந்து தனபால் அழைத்து வரப்பட்டார். தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு நீதிபதி அனுமதி அளித்தார்.

இதன் பேரில் தனபாலை, தனிப்படை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். ரமேஷையும், காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் இன்று மனுதாக்கல் செய்யவுள்ளனர். அதேவேளையில், தனபால் மற்றும் ரமேஷூக்கு ஜாமீன் கோரி, அவர்களது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் மீதான விசாரணையும் இன்று நடக்கும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x