Published : 27 Oct 2021 03:07 AM
Last Updated : 27 Oct 2021 03:07 AM
கூட்டுறவுச் சங்கங்களில் 40 கிராமுக்குக் குறைவாக நகை அடகு வைத்தோருக்கான கடன் தள்ளுபடி குறித்த அரசாணை இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களில் 40 கிராம் தங்கத்துக்குக் குறைவாக அடகு வைத்தவர்களுக்கான கடன் தள்ளுபடி குறித்த அரசாணை தயாராக உள்ளது. ஓரிரு நாளில் வெளியாகும். அதைத் தொடர்ந்து நகைகளை உரிமையாளர்களிடம் தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடை ஊழியர்கள் அனைவரும் நவ.1 முதல் 3-ம் தேதி வரை 3 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். தமிழகத்தில் பொங்கலுக்குத்தான் இலவச வேட்டி, சேலை வழங்குவது வழக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT