Published : 09 Oct 2021 03:10 AM
Last Updated : 09 Oct 2021 03:10 AM
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டையில் இளையான்குடியைச் சேர்ந்த டெய்லர் அர்ஷத்திடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் காவல் ஆய்வாளர் வசந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில் மீண்டும் மனுத் தாக்கல்செய்திருந்தார். அந்த மனு கடந்த7-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர், “வசந்தியின் கணவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மனுதாரர் 90 சதவீதகேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை. இதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது'' என்றார்.இதையடுத்து நீதிபதி, “மனுதாரரின் கணவர் ஒரு மணி நேரத்தில்விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும். விசாரணைக்குஒத்துழைத்தால் ஜாமீன் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்'' என்று கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.
3 வழக்கு நிலுவையில்..
இதையடுத்து வசந்தியின் கணவர் விசாரணை அதிகாரி முன்புநேற்று முன்தினம் ஆஜரானார். இதற்கிடையே இந்த மனு மீண்டும் நீதிபதி புகழேந்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், "வசந்தியின் மீது 3 வழக்கு நிலுவையில் உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, மனுதாரர்30 நாட்கள் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தையுடனும் விசாரணைக்குஒத்துழைக்கவில்லை என்றாலோ, சாட்சிகளைக் கலைக்க முயன்றாலோ அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்யக் கோரலாம் என்றும்கூறி வசந்திக்கு ஜாமீன் வழங்கிநீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT