Published : 28 Sep 2021 03:18 AM
Last Updated : 28 Sep 2021 03:18 AM
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது; எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடக்கின்றன. மிகச்சாதாரண திட்டங்களே நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்நேற்று நடைபெற்றது.
மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் பழனிசாமி பங்கேற்று பேசியது:
திமுக ஆட்சிக்கு வந்து 202அறிவிப்புகளை நிறைவேற்றி உள்ளதாக ஸ்டாலின் சொல்கிறார். அப்படியெனில் எவ்வளவு திட்டங்களை நிறைவேற்றி இருக்க வேண்டும். நீங்களே எண்ணிப் பாருங்கள்.தேர்தலில் போது 505 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, கூடுதலாக 20 என 525 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது.
இப்போது 202 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக கூறுகிறார். இதில் மூன்று, நான்கு அறிவிப்புகள் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளன. மற்றவை மிகச் சாதாரண அறிவிப்புகளாகும். இந்த அறிவிப்புகளை ஊடகங்களில் வெளியிட்டுஉள்ளனர். அந்தக் கட்சியை காப்பாற்றுவதே ஊடகங்கள்தான்.
குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 என அறிவித்தார்கள். கல்விக்கடன் தள்ளுபடி என்றார்கள். முதியோர் உதவித்தொகை ரூ.1,500 என்றார்கள். மகளிர் சுய உதவிக்குழு வாங்கிய கடன் தள்ளுபடி என்றார்கள். தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதியத்தை ரூ.150 ஆக உயர்த்தப்படும் என்று சொல்லிவிட்டு, தற்போது மத்திய அரசுக்குபரிந்துரை செய்துள்ளதாக பச்சைப்பொய் சொல்கிறார்கள்.
பெயர் மாற்றப்பட்ட திட்டம்
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மினி கிளினிக்கை படிப்படியாக குறைத்து விட்டார்கள். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனஅதிமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை என்பதை பெயர் மாற்றி சொல்கிறார்கள். அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்த திட்டங்களாக சொல்லி வருகின்றனர்.இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு உச்சத்துக்கு சென்றுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து வருவதாக டிஜிபி சொல்கிறார்.
அதிமுக அரசில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சிறப்பாக ஆட்சி செய்ததாக நாங்கள் விருது பெற்றோம். இந்தியாவில் உணவு தானிய உற்பத்தியில் 100 லட்சம் மெட்ரிக் டன் பெற்று, நாம் விருது பெற்றோம். குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்தோம். பின் தங்கிய மாவட்டமான விழுப்புரம் இளைஞர்கள் படிக்கும் வகையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால் இந்த ஊரைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் இதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதாக அறிவித்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜூனன், முன்னாள்அமைச்சர் ஒ.எஸ்.மணியன், முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT