Published : 23 Aug 2021 03:13 AM
Last Updated : 23 Aug 2021 03:13 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நேற்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களிடம் கூறியது:
நீதிமன்றம் காட்டியுள்ள வழிமுறைகளை கடைபிடித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்குரிய சட்டத் திருத்தம் நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவரப்படும்.
கோடநாடு வழக்கு முடிந்து போனதல்ல. சாட்சிகளிடம் விசாரணை செய்வதற்கான உரிமை அரசுக்கு உண்டு. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுக்க விரும்பினால், கொடுக்கலாம். யாரையும் அச்சுறுத்துவதற்கோ, மிரட்டுவதற்கோ கோடநாடு வழக்கை ஆயுதமாக பயன்படுத்தவில்லை.
அதேநேரத்தில், கோடநாடு விவகாரத்தில் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நடந்தது என்ன என்பதை தெளிவுபடுத்துவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்கிறபோது, கோபப்படுவதில் நியாயம் இல்லை. இது, பழிவாங்கும் போக்கு என்று கூறுவது ஏற்புடையதல்ல என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT