Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM
தமிழில், ‘8 தோட்டாக்கள்’ , ‘தானாசேர்ந்த கூட்டம்’ போன்ற படங்களில் நடித்தவர் மீரா மிதுன்.
சமீபத்தில் பட்டியலின மக்கள்மற்றும் திரைத் துறையில் பணியாற்றும் பட்டியலினத்தவர்கள் தொடர்பாக அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் கொடுக்கப்பட்ட புகார்களின்பேரில், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பினர்.
அதைத் தொடர்ந்து மீரா மிதுன்வெளியிட்ட வீடியோவில், “தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்குபோகவில்லையா? ஆனால், என்னை கைது செய்வது கனவில் தான் நடக்கும். பட்டியலின மக்களை ஒட்டுமொத்தமாக தவறாகநான் சொல்லவில்லை. அந்த மக்களில் எனக்கு தொந்தரவு கொடுத்தவர்களையே தவறானவர்கள் என்று சொன்னேன்” என குறிப்பிட்டார்.
இந்நிலையில் கேரளாவில் பதுங்கி இருந்த மீரா மிதுனை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதற்காக ஏற்கெனவே, சென்னை எம்.கே.பி.நகர் போலீஸார் மீரா மிதுன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கேரளாவிலும் அவர் மீது வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT