Published : 12 Aug 2021 03:20 AM
Last Updated : 12 Aug 2021 03:20 AM
தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,121, பெண்கள் 843 எனமொத்தம்1,964 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 243, கோவையில் 229, ஈரோட்டில் 167, செங்கல்பட்டில் 140 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 81,094-ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 25 லட்சத்து 26,317 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,917 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். தமிழகம் முழுவதும் 20,382 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று 28 பேர்உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,395-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,345 பேர் இறந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT