Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM
தமிழகத்தில் புதிதாக 1,893 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முதியவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 1,086, பெண்கள் 807 என மொத்தம் 1,893 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக கோவையில் 224, சென்னையில் 209, ஈரோட்டில் 169, செங்கல்பட்டில் 105 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 25 லட்சத்து 79,130 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 25 லட்சத்து 24,400 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 1,930 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 20,363 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று நடுத்தர வயதினர், முதியவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34,367 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 8,342 பேர்உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT