Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM
மத்திய மீன்வள மசோதாவை கண்டித்து நாகர்கோவில் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் மீனவ கூட்டமைப்புகள் மற்றும் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்புசார்பில் போராட்டம் நடந்தது.
கரோனா ஊரடங்கால் அனுமதி வழங்கப்படாத நிலையில் இந்த போராட்டத்தில் பங்கேற்ற கோட்டாறு மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதரணி, தெற்காசிய மீனவ தோழமை அமைப்பு பொதுச் செயலாளர் சர்ச்சில் உட்பட 400 பேர் மீது நேசமணி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுபோல், குமரி கடலோரக் கிராமங்களில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 1,600 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT