Published : 15 May 2021 03:12 AM
Last Updated : 15 May 2021 03:12 AM

நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் - ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்க அரசு அனுமதி : வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

உதகையில் டிவிஎஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரியிடம் நேற்று வழங்கிய வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உள்ளிட்டோர். படம்: ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கிஉள்ளது என வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், உதகையில் உள்ள தமிழக விருந்தினர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா கட்டுப்பாட்டு பணிகள் குறித்து, அனைத்துத் துறை அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, டிவிஎஸ் அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டிகளை, மாவட்ட சுகாதாரத் துறைக்கு வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா சிகிச்சை அளிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக்சிஜன் இருப்பு அதிகமாக உள்ளதுடன், சிகிச்சை மையங்களில் கூடுதலாக படுக்கைகள் காலியாக இருக்கின்றன. இதுவரை, மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இறப்பு விகிதமும் குறைவாக உள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்க நீலகிரி, பெரம்பலூர், விருதுநகர் மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங்களிலும் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும்.

மனித - விலங்கு மோதலைஉடனடியாக தடுக்க முடியாது.யானைகள் வழித்தடம் மற்றும்வனப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுஉள்ளதாலும், தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டுள்ளதாலும் மனித - விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கவும், காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து ஊருக்குள் வந்தால் வனப் பகுதிக்குள் விரட்டவும் வனத் துறையில் புதிதாக ஒரு பிரிவு உருவாக்கப்படும். இவ்வாறு வனத் துறை அமைச்சர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x