Published : 17 Apr 2021 03:13 AM
Last Updated : 17 Apr 2021 03:13 AM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக குடும்பத்தினருடன் நேற்று கொடைக்கானல் வந்தார். மு.க.ஸ்டாலினும் அவரது குடும்பத்தினரும் இங்கு 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர்.
முன்னதாக சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று காலை 2 தனி விமானங்களில் குடும்பத்தினருடன் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். முதல் விமானத்தில் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகள் கிருத்திகா உதயநிதி, பேரன், பேத்திகள் என 8 பேர் பயணம் செய்தனர்.
2-வது விமானத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும் உறவினர்கள் என 8 பேர் பயணம் செய்தனர்.
மதுரை விமான நிலையம் வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து கார்கள் மூலமாக நேற்று மாலை கொடைக்கானல் வந்தனர். கொடைக்கானலில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 9 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் குடும்பத்தினர் அனைவரும் அங்கு தங்கினர். கொடைக்கானலில் 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
கொடைக்கானலில் தங்கிஉள்ள மு.க.ஸ்டாலினை கட்சியினர் யாரும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
முன்னதாக, 2019-ல் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கொடைக்கானல் வந்து தங்கி ஓய்வெடுத்தார். அப்போது ஏரிச்சாலையில் நடைபயிற்சி, ஏரியில் மனைவியுடன் படகு சவாரி செய்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT