Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்நிலையில், தாராபுரத்தில் வரும் 30-ம் தேதி நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசஉள்ளதாக தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுரையில் ஏப். 2-ம்தேதி நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
வரும் 26-ம் தேதி பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, ஏப்ரல் 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
பிரதமர் மோடி வரும் 30-ம் தேதி தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
உதகை தொகுதி பாஜக வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து, ஏப்.1-ம் தேதி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT