Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

பழநியில் ஆசிரியை, மாணவிக்கு கரோனா தொற்று

பழநி

பழநி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நான்கு ஆசிரியைகள் மற்றும் ஒரு மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கரோனா தொற்றுஉறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியை நான்கு பேருக்கும், ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x