Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM
கல்வி நிறுவனங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, 2011 ஜனவரி 1-ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களை நகர்புற ஊரமைப்புத் துறையின் முறையான அனுமதி பெற்று வரைமுறைப்படுத்திக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வரைமுறைக்கு விண்ணப்பிக்காத கல்வி நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க கூடுதல்கால அவகாசமும் வழங்கப்பட்டுஉள்ளது.
இதற்காக தமிழக முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு பாராட்டு விழா நாளை (பிப்.27) காலை 9:15 மணிக்கு திருவான்மியூர், ராமசந்திரா கன்வென்சன் சென்டரில் நடைபெற உள்ளது. அவ்விழாவில் 'கோவிட்-19 தொற்றுக்கு பிந்தையஉலகத்துக்கு கல்வி நிறுவனங்களை தயார்படுத்தல்' குறித்த கருத்தரங்கமும் நடைபெறும்.
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, சுயநிதி நிபுணத்துவ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு, அகில இந்திய சுயநிதி தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, சிபிஎஸ்இ ஸ்கூல் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் சங்கம் ஆகியவை சார்பில் நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT