Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

பிப்.25-ல் காணொலி மூலம்அமமுக செயற்குழு, பொதுக்குழு

சென்னை

அமமுக செயற்குழு, பொதுக்குழுகூட்டம் வரும் 25-ம் தேதி காணொலிகாட்சி மூலம் நடக்கிறது.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலக்கொள்கைகளை வாழ வைப்பதற்காக அமமுக போராடி வருகிறது.

அமமுகவின் செயற்குழு,பொதுக்குழு கூட்டம், கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் வரும் 25-ம்தேதி காலை 9 மணிக்கு நடக்கிறது. கரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி, தமிழகத்தின் 10 இடங்களை காணொலி வாயிலாக இணைத்து இக்கூட்டம் நடக்கிறது.

இதில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா பிறந்தநாள்

அமமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், ‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் விழா, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் நாளைகாலை 11 மணி அளவில் நடக்கிறது. இதில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு, ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். மாலை 5 மணி அளவில் சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் ஒருங்கிணைந்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மேற்கு, திருவள்ளூர் தெற்கு,தென்சென்னை கிழக்கு மாவட்டங்கள் சார்பில் நடக்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தினகரன் கலந்துகொள்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x