Published : 12 Feb 2021 03:17 AM
Last Updated : 12 Feb 2021 03:17 AM

திமுக ஆட்சியில் ஒரு பைசா மின் கட்டணத்துக்காக போராடிய விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் திருப்பூர் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி.

திருப்பூர்திமுக ஆட்சியில்தான்

மின் கட்டணத்துக்காக போராடிய விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று திருப்பூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்தார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி, திருப்பூர் மாநகர், பாண்டியன் நகர், வளர்மதிபாலம் மற்றும் சிடிசி கார்னர் ஆகிய பகுதிகளில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திட்டத்தின் தொடக்க விழாவையும், தமிழக முதல்வராக நானே தொடங்கிவைப்பேன். இத்திட்டம், முழுவதும் மாநில அரசின் நிதியில் ரூ.1650 கோடியில் நிறைவேற்றப்படுகிறது.

விவசாயிகளின் கஷ்டங்களை அறிந்தவன் நான். ஒரு பைசா மின் கட்டணத்துக்காக போராடிய விவசாயிகளை, அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுக சுட்டுக்கொன் றது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி. இதற்கு, பெருமாநல்லூரில் உள்ள நினைவுத் தூணே சாட்சி.

விவசாயிகளின் தேவை என்ன வென்று எனக்கு தெரியும். திமுகஆட்சிக்கு வரப்போவதும்இல்லை; மனு வாங்கும் பெட்டிகளை ஸ்டாலின் உடைக்கப்போவது மில்லை. மூன்று மாதங்களில் முதல்வர் ஆகிவிடுவேன் என்கிறார் ஸ்டாலின். தேர்தலில் மக்கள் வாக்களித்தால் தான் முதல்வராக முடியும். முதல்வர் பதவி கடையில் விற்பனை செய்யப்படும் பொருளல்ல.

2000-ம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, பேரறிவாளன் உட்பட 7பேரின் கருணை மனுக்கள் மீதுஎன்ன நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது? நீதிமன்றம் தீர்ப்பான மரண தண்டனையை அமல்படுத்தலாம் என திமுக அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்ட பலர் கையெழுத்திட்டனர். நளினிக்கு குழந்தை இருப்பதால், அவரைத் தவிர அனைவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கோரி கையெழுத்திட்டு ஆளுநருக்கு அனுப்பியவர்கள் திமுகவினர்.

தீர்மானம் நிறைவேற்றியிருந்தால் அவர்கள் மரண தண் டனை பெற்றிருப்பார்கள். இன்றைக்கு 7 பேரை விடுதலை செய்யக்கூறி, திமுக பொய் பேசுவதை மக்கள் தெரிந்துகொள்ள வேண் டும். 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டி, அதிமுக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியிருந்தோம். இதை,2000-ம் ஆண்டில் திமுக செய்தி ருந்தால், 21 ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருந்திருக்க வேண்டி யிருக்காது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x