Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, அண்ணா கலையரங்கம் அருகே நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது, ‘‘எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல் பட்டம் வழங்கியவரும் இரண்டுபுகழ்பெற்ற பல்கழைக்கழகங் களால் முனைவர் பட்டம் பெற்றவரும் இசைப் பேரறிஞர் பட்டம் பெற்றவருமான கிருபானந்த வாரியார் சுவாமிகளின் பிறந்த நாளானஆகஸ்ட் 25-ம் தேதி, இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்’’ என அறிவித்தார்.
இந்நிலையில், வேலூரில் தங்கியிருந்த முதல்வர் பழனிசாமியை வாரியாரின் சகோதரர் மகன் புகழனார், மருமகள் ஏலவார் குழலி, வாரியாரின் அக்காள்பேரன் பாபு உள்ளிட்டோர் நேற்றுகாலை சந்தித்து ‘வாரியார் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி’ தெரிவித்துக்கொண்டனர். முதல்வருக்கு, வாரியார் சுவாமியின் திருவுருவப் படத்தையும் பரிசாக வழங்கினர்.
அப்போது, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர்ராமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சி.சண்முகம், வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT