Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM
கேந்திரிய வித்யாலயாவில் தமிழை கட்டாய பாடமாக்குவது தொடர்பாக பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவார் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம், கோபியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. மத்திய அரசின் நவோதயா மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுவார். தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் உள்ளனர். பள்ளிகளை திறந்தபின்னர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT