Published : 19 Jan 2021 06:50 AM
Last Updated : 19 Jan 2021 06:50 AM
திமுகவின் 11-வது மாநில மாநாடு திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் நடைபெற உள்ளது. மாநாட்டுத் திடலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட உள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது செல்வாக்கை நிலைநாட்ட பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பிரச்சார பயணங்கள் போன்றவற்றிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், திமுகவின் 11-வது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடத்தை சுத்தம் செய்து, பந்தல் மற்றும் அலங்கார வளைவுகள் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது தேங்காய், வாழைப்பழம், கற்பூரம், எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு உள்ளிட்டவற்றைக் கொண்டு பூமிபூஜை நடைபெற்றது.
இதுகுறித்து திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘மாநாட்டுத் திடலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.19) பார்வையிட உள்ளார்.
மாநாடு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT