Published : 18 Jan 2021 03:13 AM
Last Updated : 18 Jan 2021 03:13 AM
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளைக் கேட்போம் என தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நேற்று அவர் அளித்த பேட்டி: கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதிமுக கூட்டணியிலேயே தேமுதிக நீடிக்கிறது. ஆனால் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை. தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூடி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கும். பாமகவுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவோ, அமைச்சர்களோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 20 சதவீத உள்ஒதுக்கீடு தொடர்பான விவகாரம் குறித்துதான் பேசி வருகின்றனர். அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவதில் எங்களுக்கு எந்த நெருடலும் இல்லை.
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டதைவிட இம்முறை அதிக தொகுதிகளை கேட்போம். மணப்பாறை சட்டப்பேரவை தொகுதியில் தேமுதிகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. நிச்சயம் கேட்போம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT