Published : 04 Dec 2020 03:15 AM
Last Updated : 04 Dec 2020 03:15 AM

தி.மலையில் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 17-ம் தேதி, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த 29-ம் தேதி மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

கரோனா தடுப்பு நடவடிக்கையால், மாட வீதியில் நடைபெற வேண்டிய உற்சவங்கள் அனைத்தும், கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்திலும் மற்றும் நகரில் உள்ள ஐயங்குளத்தில் நடைபெற வேண்டிய தெப்ப உற்சவமும், கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்தக் குளத்தில் நடைபெற்றது. மேலும், 5-ம் பிரகாரத்தில் அண்ணாமலையார் கிரிவலம் வந்து அருள் பாலித்தார்.

இதையடுத்து, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று இரவு நடைபெற்ற சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவடைந்த்து. அப்போது, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்டிகேஸ்வரர் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அண்ணாமலை உச்சியில் வரும் 9-ம் தேதி வரை மகா தீப தரிசனத்தை பக்தர்கள் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x