Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஆவின் இனிப்புகள்ரூ.15 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனம் ஸ்டப்டு டிரை ஜாமூன், நட்டி மில்க் கேக், ஸ்டப்டு மோதி பாக், காஜு பிஸ்தா ரோல், பிளேவர்டு மில்க் பர்பி மற்றும் இனிப்புகள், நெய் முறுக்கு ஆகியவற்றை சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தி விற்பனை செய்தது.
இதில் இணையத்தின் மூலம் இந்த ஆண்டு 114 மெட்ரிக் டன் இனிப்புகள் ரூ.6 கோடிக்கு விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட ரூ.1.15 கோடி அதிகமாகும்.
இது தவிர, விற்பனை நிலையங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட நேரடி விற்பனையில் 186 மெட்ரிக்டன் ஆவின் இனிப்புகள் ரூ.9கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தீபாவளி சிறப்பு விற்பனையில் அறிமுகப்படுத்தப்பட்ட 5 வகையான இனிப்புகளில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்ற காஜு பிஸ்தா ரோல், ஸ்டப்டு மோதிபாக் ஆகிய 2 இனிப்பு வகைகளும்தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டுவிற்பனை செய்யப்படும் எனஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT