Published : 04 Nov 2020 03:13 AM
Last Updated : 04 Nov 2020 03:13 AM
தமிழகத்தில் கரோனாவில் இருந்து7 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 2,435 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள்1,557, பெண்கள் 877, மூன்றாம்பாலினத்தவர் ஒருவர் என 2,435 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 669, கோவையில் 238, செங்கல்பட்டில் 136, திருவள்ளூரில் 113 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 31,942 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 1 லட்சத்து 91,787 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 1,527 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 683 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 2,707 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். சென்னையில் 6,384 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 19,201 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் முதியவர்கள் உட்பட 15 பேர், தனியார் மருத்துவமனைகளில் 16 பேர் என நேற்று 31 பேர்உயிரிழந்தனர். அதிகபட்சமாக சென்னையில் 8 பேர் இறந்துள்ளனர். இதன்மூலம் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,214 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,677 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 1,848, செங்கல்பட்டில் 44,136,கோவையில் 43,989, திருவள்ளூரில் 38,232 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. 203அரசு மற்றும் தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 1 லட்சத்து 69,917 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 70,398 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 26,050 பேர், 13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 6 லட்சத்து 15,264 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 90,628 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT