Published : 02 Nov 2020 03:13 AM
Last Updated : 02 Nov 2020 03:13 AM
ராமநாதபுரம்: இலங்கைக்கு கடத்த முயன்ற 1,875 கிலோ மஞ்சளை கியூ பிரிவு போலீஸார் மண்டபத்தில் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடல் வழியாக படகு ஒன்றில் இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிரிவு போலீஸார் மண்டபம் வடக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ரோந்து சென்றனர்.
அப்போது மண்டபம் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே பதிவு எண் இல்லாத நாட்டுப் படகு ஒன்று நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்படகை கியூ பிரிவு போலீஸார் சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக மஞ்சள் இருந்ததைக் கண்டறிந்தனர். அவை, இலங்கைக்கு கடத்திச் செல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. 75 மூட்டைகளில் இருந்த 1,875 கிலோ சமையல் மஞ்சளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த படகின் உரிமையாளர் குறித்து கியூ பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT