Published : 30 Oct 2020 03:13 AM
Last Updated : 30 Oct 2020 03:13 AM

தமிழக அரசு - பொதுமக்கள் இடையே கருத்து பரிமாற்றத்துக்கான ‘நமது அரசு’ இணையதளம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

சென்னை

தகவல் தொழில்நுட்பத் துறையின் 2017-18 ஆண்டு மானிய கோரிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக கருத்துக் கணிப்புகள், ஆய்வுகள்,விவாதங்கள் போன்றவற்றில் ஆர்வத்துடன் பங்கேற்று, அதன்மூலம், தம் கருத்துகளை சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் அரசுக்கு தெரிவிக்க உதவும் வகையில், ‘நமது அரசு’ என்ற பொதுமக்களுக்கான தமிழக அரசின் இணையதளம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழக மின்னாளுமை ஆணையரகத்தால் ’நமது அரசு’ இணையதளம் ரூ.91.80லட்சத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மக்களுக்கும் அரசுக்கும்இடையில் உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றம் செய்து,மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அரசுக்கு ஆலோசனை வழங்கும் தளமாக இது இருக்கும். கலந்துரையாடல் செயல்பாடுகள், தகவல்களை பரப்பு தல், படைப்புத் தளம், கருத்துக்களம், கருத்துக்கணிப்புகள் போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்டு மக்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் மற்றும் வாக்கெடுப்புகள் அடிப்படையில் அரசு சேவைகளை செம்மையாக செயல்படுத்த முடியும்.

‘நமது அரசு’ வலைதளம், பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையில் ஒரு புதிய நல்லுறவை ஏற்படுத்துவதுடன், அரசுஇயந்திரத்தை எளிதாக மின்னணு வழியில் தொடர்பு கொள்ளவும் உதவும். மேலும், தற்போதுள்ள திட்டங்கள் மற்றும் எதிர்கால நலத்திட்டங்கள் குறித்து கருத்துக்கணிப்புகளை பெற்று அவற்றை மேம்படுத்துவதற்கான ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளுக்கேற்ப புதிய திட்டங்களை வகுக்கவும் அரசுக்கு உறுதுணையாக அமையும்.

இந்த புதிய இணையதளத்தை முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் சண்முகம், தகவல் தொழில்நுட்பவியல் செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா,மின்னாளுமை ஆணையர் சந்தோஷ் கே மிஸ்ரா பங்கேற்றனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x