Last Updated : 06 Jul, 2021 03:12 AM

 

Published : 06 Jul 2021 03:12 AM
Last Updated : 06 Jul 2021 03:12 AM

ஜூன் 25: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியி லிருந்து கான்பூரில் உள்ள சொந்த ஊருக்கு ரயிலில் சென்றார்

ஜூன் 25: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டெல்லியி லிருந்து கான்பூரில் உள்ள சொந்த ஊருக்கு ரயிலில் சென்றார். இதன்மூலம் 2006இல் அப்துல் கலாமுக்குப் பிறகு ரயிலில் சென்ற குடியரசுத் தலைவரானார் ராம்நாத் கோவிந்த்.

ஜூன் 25: தமிழ்நாட்டிலேயே 100 சதவீதம் கரோனா தடுப்பூசி செலுத்திய கிராமமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் தேர்வானது.

ஜூன் 26: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைச் செயல்படுத்துவதில் நாட்டிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் உத்தர பிரதேசம் உள்ளது.

ஜூன் 27: புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்.எல்.ஏ. சந்திரபிரியங்கா அமைச்சரானார். கடைசியாக 1980இல் திமுக அமைச்சரவையில் ரேணுகா அப்பாதுரை அமைச்சராக இருந்தார்.

ஜூன் 28: டோக்கியோ ஒலிம் பிக்கில் நீச்சல் போட்டிக்குத் தேர்வான முதல் இந்தியர் என்னும் சிறப்பை இந்திய வீரர் சஜன் பிரகாஷ் பெற்றார்.

ஜூன் 29: சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 22 ஆண்டுகள் விளையாடிய முதல் மகளிர் கிரிக்கெட் வீராங்கனை என்னும் பெருமைக்கு உரியவரானார் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலிராஜ்.

ஜூலை 2: தமிழ்நாட்டில் வன்னியர் சமுதாயத்துக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

ஜூலை 2: தமிழ்நாட்டில் இ-பதிவு ரத்து, பேருந்து இயக்க அனுமதி ஆகிய தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x