Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வைட்டமின்-டிக்கு உண்டு

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் வைட்டமின்-டிக்கு உண்டு. எப்படி? உடலில் நோய்த் தடுப்பாற்றலை அதிகப்படுத்த இந்த வைட்டமின் உதவுகிறது என்பதால், கரோனா வைரஸின் படியாக்க வளர்ச்சியைத் தடுத்து விடுகிறது. மேலும், இது ரத்தக் குழாய்களின் உள்ளடுக்குச் செல்கள் ‘அழற்சி’ அடையாமல் பாதுகாக்கிறது; செல்கள் சேதமடையும்போது அவற்றை உடனடியாகச் சீராக்கிவிடுகிறது. குறிப்பாக, நுரையீரல் செல்களை கரோனா வைரஸ் சேதப்படுத்தவிடாமல் தடுத்துவிடுகிறது.

ரத்தக் குழாய்களில் உள் ரத்த உறைவு ஏற்படுவதையும் இது தடுக்கிறது; கரோனா தொற்றாளர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் ‘சைட்டோகைன் புயலில்’ புரதங்கள் அளவில்லாமல் உற்பத்தியாவதைக் கட்டுப்படுத்துகிறது. இதன் பலனால், கரோனாவின் பாதிப்பு தீவிரத்தன்மைக்குச் செல்வதில்லை.

உலகத் தரவுகளின்படி வைட்டமின்-டி பற்றாக்குறை இருந்த கரோனா தொற்றாளர்கள் நோயின் தீவிரத்தன்மைக்குச் சென்றுள்ள விவரமும், போதுமான அளவுக்கு வைட்டமின்-டி இருந்தவர்கள் அறிகுறி வெளியில் தெரியாமலும், மிதமான நிலையில் குணமாகிச் சென்ற விவரமும் இந்த அறிவியல் பின்னணியை உறுதிப்படுத்துகின்றன. அதனால்தான் கரோனா தொற்றாளர்களுக்கு வைட்டமின்-டி மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x