Published : 01 Jun 2021 03:12 AM
Last Updated : 01 Jun 2021 03:12 AM
மே 22: ‘ஏ-76’ என்று பெயரிடப்பட்ட உலகின் மிகப் பெரிய பனிப்பாறை அண்டார்டிகா பனிப்பிரதேசத்திலிருந்து பிரிந்து கடலில் மிதக்கத் தொடங்கியிருப்பதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 23: கரோனா காரணமாக இந்தியாவில் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட 17 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறும் என்று சர்வதேச கால்பந்து சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மே 24: தமிழகத்தில் காஞ்சிபுரம் கோயில்கள் உள்பட இந்தியாவில் 6 இடங்கள் யுனெஸ்கோவின் உத்தேச உலகப் பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.
மே 25: நேபாளத்தில் பிரதமர் சர்மா ஒலி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், நாடாளுமன்றத்தைக் கலைத்து 6 மாதங்களில் தேர்தல் நடத்த அந்நாட்டு அதிபர் வித்யாதேவி பண்டாரி உத்தரவிட்டார்.
மே 26: தமிழகச் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக பெரும்புதூர் எம்.எல்.ஏ., கு.செல்வபெருந்தகை நியமிக்கப் பட்டுள்ளார்.
மே 27: வங்கக் கடலில் உருவான அதிதீவிர ‘யாஸ்’ புயல் ஒடிசாவின் பாலசோர் அருகே கரையைக் கடந்தது.
மே 28: தமிழகத்தில் தளர்வு இல்லாத கரோனா முழு ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்துத் தமிழக அரசு உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT