Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM
மே 12: கேரளத்தில் நீண்ட காலம் அமைச்சராகப் பணியாற்றிய பெண் என்கிற பெருமைக்குரிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கே.ஆர். கெளரி அம்மாள் (101) காலமானார்.
மே 13: கரோனாவிலிருந்து மீண்டவர்களைப் பாதிக்கும் கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த அம்ஃபோடெரிசின் - பி என்கிற மருந்தைப் பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
மே 14: நேபாள பிரதமராக சர்மா ஒலி மீண்டும் பதவியேற்றார். அவருடைய ஆட்சி கவிழ்ந்திருந்த நிலையில், அந்நாட்டு குடியரசுத் தலைவர் வித்யாதேவி பண்டாரி மீண்டும் அவரைப் பிரதமராக நியமித்தார்.
மே 16: கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாம் தவணையைப் பெறுவ தற்கான இடைவெளிக் காலத்தை 6-8 வாரங்களிலிருந்து 12-16 வாரங்களாக மத்திய அரசு அதிகரித்தது.
மே 17: புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்தது.
மே 17: டி.ஆர்.டி.ஓ., டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த 2டிஜி என்கிற கரோனா பவுடர் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது.
மே 17: கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றழைக்கப்பட்ட கி.ரா. என்கிற கி.ராஜநாராயணன் (97) காலமானார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர், கல்வியாளர், தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா (94) காலமானார்.
மே 17: அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் குஜராத்தின் போர்பந்தர் அருகே கரையைக் கடந்தது.
மே 20: இரண்டாம் முறை கேரள முதல்வராக பினராயி விஜயன் தலைமையில் 21 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது.
மே 20: கரோனா தொற்று பாதிப்பை உறுதிசெய்ய ஆண்டிஜென் ரேபிட் டெஸ்ட் என்ற பரிசோதனைக் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது.
மே 22: தமிழகத்தில் நடைமுறையில் உள்ள கரோனா முழு ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT