Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM
மார்ச் 12: பிரேசிலைச் சேர்ந்த கரினா ஒலியோனி (38) என்ற பெண், எத்தியோப்பியாவில் எர்டா அல் என்ற எரிமலையிலிருந்து வெளியேறிய 1,187 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள எரிமலைக் குழம்பு ஏரியைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.
மார்ச் 13: 2020ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் இமையத்துக்கு ‘செல்லாத பணம்’ நாவலுக்காக அறிவிக்கப்பட்டது.
மார்ச் 13: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதியாட்டத்தில் மும்பை சிட்டி முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றது.
மார்ச் 14: சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் சேர்த்து 10 ஆயிரம் ரன் எடுத்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை மிதாலி ராஜ் படைத்தார். உலக அளவில் இதற்கு முன் இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ஸ் இச்சாதனையை நிகழ்த்தியிருந்தார்.
மார்ச் 15: ‘இயற்கை’, ‘பேராண்மை’, ‘ஈ’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக் குறைவால் காலமானார்.
மார்ச் 16: இந்தியாவின் முதல் வன சிகிச்சை மையம் உத்தரகாண்ட் மாநிலம் கலிகாவில் தொடங்கப்பட்டது.
மார்ச் 16: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தமிழக வீராங்கனை பவானிதேவி தேர்வானார். வாள் வீச்சில் பங்குபெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
மார்ச் 18: உலகில் மிகவும் மாசுபட்ட 30 நகரங்களில் டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது என்று ‘ஐக்யூ ஏர்’ ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இப்பட்டியலில் இந்தியாவின் 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT