Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM
பிப்.13: உலகச் சுகாதார நிறுவனத்தில் மீண்டும் இணைவதற்கான நடவடிக் கையை அமெரிக்கா தொடங்கியது. கரோனா தொற்று விவகாரத்தில் அந்த அமைப்பிலிருந்து விலகும் முடிவை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக எடுத்திருந்தார்.
பிப்.14: இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2,360 அரசியல் கட்சிகள் பதிவுசெய்துள்ளன. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 2,301. ஜனநாயகச் சீர்த்திருத்த சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
பிப்.14: சென்னை ஆவடியில் உள்ள கனரக ஊர்தித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் மார்க் 1ஏ என்கிற பீரங்கி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
பிப்.15: இந்தியாவில் விளையாடப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஹர்பஜன் சிங்கைப் பின்னுக்குத் தள்ளி அதிக விக்கெட்டுகளை (268) வீழ்த்திய 2-வது கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றார்.
பிப்.18: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி விடுவிக்கப்பட்டார். இப்பொறுப்பு தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.
பிப்.19: 2020 ஜூனில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் சீன தரப்பில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பதை சீன ராணுவம் முதன்முதலாக ஒப்புக்கொண்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT