Last Updated : 16 Feb, 2021 03:12 AM

 

Published : 16 Feb 2021 03:12 AM
Last Updated : 16 Feb 2021 03:12 AM

பிப்

பிப்.4: மியான்மர் ராணுவம் அந்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றியது. மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது இது 3-வது முறை. முதன்முறையாக 1962-ல் ராணுவப் புரட்சி நடைபெற்றது.

பிப்.5: இந்தியாவில் முதல் பனிக்குடில் உணவகம் (இக்ளு கஃபே) காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில் அமைக்கப்பட்டது. இது பிர் பஞ்சால் மலைத்தொடரில் 2,650 மீட்டர் உயரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப் பெரிய பனிக்குடில் உணவகம்.

பிப்.6: இமாச்சலப் பிரதேச அமைச்சரவையின் மொத்த செயல்பாட்டையும் காகிதமற்ற பணியாக அந்த மாநில அரசு மாற்றியது. இதன்மூலம் நாட்டின் முதல் மின் அமைச்சரவை என்கிற பெருமையை இமாச்சலப் பிரதேச அமைச்சரவை பெற்றது.

பிப்.7: உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றில் பனிச்சரிவும் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் 35 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர்.

பிப்.8: தமிழகத்தில் மேக மலை, வில்லிப்புத்தூர் ஆகிய காட்டுப்பகுதி சரணாலயங்களுக்குப் புலிகள் காப்பக அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியது. இது தமிழகத்தின் 5-வது, நாட்டின் 51-வது புலிகள் காப்பகம்.

பிப்.9: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் குறித்து பொய்யான தகவல்களை பரப்பியதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x