Published : 02 Feb 2021 03:17 AM
Last Updated : 02 Feb 2021 03:17 AM
ஜன.24: தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் ‘வாசுகி’ என்று பெயரிடப்பட்ட மிகவும் நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இந்தச் சரக்கு ரயில் 3.5 கி.மீ. தூரத்துக்கு இணைக்கப்பட்டது.
ஜன.25: பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் (பத்ம விபூஷண்), சாலமன் பாப்பையா, பாப்பம்மாள், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம், மருத்துவர் திருவேங்கடம், சமூக சேவகர் சுப்புராமன், பாம்பே ஜெய, சுப்பு ஆறுமுகம், தர் வேம்பு, ஓவியர் கேசி சிவசங்கர், விளையாட்டு வீராங்கனை பி.அனிதா என தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருது அறிவிக்கப்பட்டது.
ஜன.26: குடியரசு நாளன்று தலைநகர் டெல்லியில் உழவர்கள் பிரம்மாண்டமான டிராக்டர் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியில் நடந்த வன்முறையில் ஒரு உழவர் உயிரிழந்தார்.
ஜன.27: கரோனா தொற்றுநோய்க்கான இந்தியத் தடுப்பூசிகள் மியான்மர், பூடான், வங்கதேசம், நேபாளம். மாலத்தீவுகள், இலங்கை, ஷீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டன.
ஜன.27: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டது.
ஜன.27: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் 4 ஆண்டு தண்டனை அனுபவித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா விடுதலை செய்யப்பட்டார்.
ஜன.30: கரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஞ்சிக் கோப்பைக்கான காலண்டரைத் தயார்செய்வதில் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாக, அத்தொடரை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரத்து செய்துள்ளது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 87 ஆண்டுகளில் முதன்முறையாக ரஞ்சிக் கோப்பை போட்டித் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT