Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
கடும் வெயில் மற்றும் பங்குனி திருவிழா பரவலாக நடைபெறுவதாலும் எலுமிச்சையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் இதன் விலை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்துள்ளது.
வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர் உள்ளிட்ட பகுதியில் எலுமிச்சை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் இதமான பருவநிலை, மூலவைகையின் நீர்வளம் போன்றவற்றினால் இப்பகுதியில் எலுமிச்சை மகசூல் கூடுதலாகவே இருக்கும்.
இருப்பினும் விலை குறைவினால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிடைப் பதில்லை. இந்நிலையில் தற்போது கோடை தொடங்கி உள்ளதை தொடர்ந்து எலுமிச்சை விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால் மொத்த வியாபாரிகள் கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளுக்கு எலுமிச்சை கொள்முதலுக்காக வரத் தொடங்கி உள்ளனர்.
மேலும் பங்குனி திருவிழாவும் பரவலாக நடைபெற்று வருவதுடன், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் எலுமிச்சையின் தேவை வெகுவாய் உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்ற இதன் விலை தற்போது ரூ.100 முதல் ரூ.120 வரை அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT