Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
ண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில் 132 வேட்பாளர் கள் களம் இறங்கியுள்ள நிலையில் அதிகபட்சமாக பழநி தொகுதியில் 24 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் 14 வேட் பாளர்களும் போட்டியிடுகின்றனர். மொத்தம் 2673 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,516 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,211 கட்டுப்பாட்டு கருவிகள், 3611 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி கள் ஆகியவை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
திண்டுக்கல் தொகுதியில் 21 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 397 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக் கப்பட உள்ளன. அதன்படி 954 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 477 கட்டுப்பாட்டு கருவி, 536 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பழநி சட்டசபை தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 405 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 972 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 486 கட்டுப்பாட்டு கருவி, 547 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 352 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அமைக்கப்பட உள்ளது. அதன்படி 423 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 423 கட்டுப்பாட்டு கருவி, 476 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆத்தூர் தொகுதியில் 20 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். 407 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 978 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 489 கட்டுப்பாட்டு கருவி, 550 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிலக்கோட்டை தொகுதியில் 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 342 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள் ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 822 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 411 கட்டுப்பாட்டு கருவி, 462 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.
நத்தம் தொகுதியில் 15 வேட் பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதியில் 402 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன்படி 483 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 483 கட்டுப்பாட்டு கருவி, 543 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
வேடசந்தூர் தொகுதியில் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு 368 வாக்குச்சாவடிகள் அமைக் கப்பட்டுள்ளன. அங்கு ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக் கப்பட உள்ளன. அதன்படி 884 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 442 கட்டுப்பாட்டு கருவி, 497 வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதிகபட்சமாக பழநி தொகுதியில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். குறைந்தபட்சமாக ஒட்டன்சத்திரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டி யிடுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT