சிவகங்கை அருகேஅதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை :

சிவகங்கை அருகேஅதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரி சோதனை :

Published on

சிவகங்கை அருகே பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்ததை அடுத்து அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர், பறக்கும் படையினர் சோதனையிட்டனர்.

சிவகங்கை அருகே அரசனூரில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் பணப்பட்டுவாடா செய்வதாக நேற்றுமுன்தினம் இரவு தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் மைலாவதி தலைமையிலான பறக்கும் படையினர் மற்றும் மதுரை வருமானத்துறை அதிகாரிகள் அதிமுக பிரமுகர் வீடு மற்றும் மற்றொருவரின் தோப்பு ஆகியவற்றில் சோதனையிட்டனர்.

பல மணி நேரம் நடந்த சோதனையில் பணம் எதுவும் சிக்கவில்லை. இதனால் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in