Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM

11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் : ராமநாதபுரம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்

பெருங்குளத்தில் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் சீட்டுகளை வழங்கினார் மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் மற்றும் குயவன்குடி ஆகிய கிராமப் பகுதிகளில் சனிக்கிழமை மாவட்டத் தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்காளர் சீட்டுகளை நேற்று வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:

தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்திட வாக்காளர் சீட்டு மட்டும் போதுமானதல்ல. வாக்காளர் சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வருவது அவசியம்.

வாக்காளர் அடையாள அட்டை கொண்டுவர இயலாத பட்சத்தில் புகைப்படத்துடன் கூடிய 1) கடவுச்சீட்டு, 2) ஓட்டுநர் உரிமம், 3) மத்திய, மாநில அரசுகளின் பணியாளர் அடையாள அட்டை , 4) வங்கி அல்லது அஞ்சல் கணக்குப் புத்தகங்கள், 5) வருமான வரி நிரந்தரக் கணக்கு எண் அட்டை, 6) ஸ்மார்ட் கார்டு, 7) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, 8) மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, 9) ஓய்வூதிய ஆவணம் , 10) நாடாளுமன்ற / சட்டமன்றப் பேரவை/மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அலு வலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பெருங்குளம் சோதனைச்சாவடி பகுதி யில் தேர்தல் நன்னடத்தை கண்காணிப்பு தொடர்பான நிலைத்த கண்காணிப்பு குழு அலுவலர்கள் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x