Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
கமுதி அருகே முதியவரின் தபால் வாக்கைப் பதிவு செய்த அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து, கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பரமக்குடி தொகுதிக்குட்பட்ட செய்யாமங்களம் கிராமத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோரின் 10 தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி மார்ச் 29-ல் பரமக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது.
இந்நிலையில் செய்யாமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி(82) என்ற முதியவரிடம் தபால் வாக்கு பெற்று, பெட்டிக்குள் போடும் பணியை அலுவலர்கள் மேற்கொண்டனர்.
அப்போது சுப்பிரமணி மகன் சண்முகவேல்(44), அவரது தம்பி சரவணன்(36), முனியசாமி மகன் மங்களசாமி(55) ஆகியோர் குறுக்கிட்டு, எனது தந்தையின் வாக்கை எனக்குத் தெரியாமல் ஏன் பதிவு செய்தீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் அதிகாரிகள் வந்த வாக னத்தின் கண்ணாடியை உடைத் துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் சத்யபாமா அளித்த புகாரின் பேரில் சண்முகவேல், சரவணன், மங்களசாமி ஆகிய 3 பேரை அபிராமம் போலீஸார் கைதுசெய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT