Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
திருக்கோவிலூர்
மிகப்பெரிய தொகுதியாக விளங்கிய முகையூர் தொகுதி, 2011ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிகளும், தி. அத்திப்பாக்கம், வீரபாண்டி, கண்டாச்சிபுரம், குலதீபமங்கலம், முகையூர், வீரசோழபுரம்,டி.மழவராயனூர், செம்மார், மலையம்பட்டு உள்ளிட்ட 94 ஊராட்சிகளும் உள்ளடக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் திறந்துவிடப்படும் தெண்பெண்ணையாற்று நீர் இத்தொகுதிக்குள் நுழைந்து கடலூர் மாவட்டம் வரை செல்கிறது. புகழ்பெற்ற கபிலர் குன்று, உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டானேஸ்வரர் ஆலையம், ஞானானந்த கிரி சுவாமிகள் மூல தபோவனம் உள்ளிட்டவை இத்தொகுதியில் உள்ளன.
வெற்றி வரலாறு
தலா ஒரு முறை தேமுதிகவும், திமுகவும் வெற்றி பெற்றுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பு
புராதன நகர மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ள தெப்பக்குளத்தை புனரமைக்க வேண்டும்.
ஏரியில் இருந்து குளத்திற்கு தண்ணீர் வரும் பாதாள கால்வாயை சீரமைக்க வேண்டும்.
நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
மதிப்பூட்டப்பட்ட வேளாண் தொழிற் கூடங்களை அமைத்து, வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும்.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,27,601
பெண் வாக்காளர்கள் - 1,26,342
திருநங்கைகள் - 38
மொத்த வாக்காளர்கள் - 2,53,981
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT