Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

வானூர் (தனி)2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது

திருவக்கரையில் கல்மரப் பூங்கா.

வானூர் (தனி)

2007ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி வானூர் வட்டமும் விழுப்புரம் வட்டத்தின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியவாறு மாற்றியமைக்கப்பட்டது.

இத்தொகுதியில் கலிங்கமலை, வழுதாவூர், பெரியபாபுசமுத்திரம், சின்ன பாபுசமுத்திரம், கண்டமங்கலம், ஆழியூர், பள்ளிநெலியனூர், கொத்தாம்பாக்கம், பள்ளிச்சேரி, பள்ளிப்புதுப்பட்டு, மிட்டாமண்டகப்பட்டு, நவமால் மருதூர், கோண்டூர், சொக்கம்பட்டு, மெட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, சொரப்பூர், வீராணம், பாக்கம், கிருஷ்ணாபுரம், ராம்பாக்கம், சொர்ணாவூர் கீழ்பாதி, சொர்ணாவூர் மேல்பாதி, களஞ்சிக்குப்பம் மற்றும் பேரிச்சம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இத்தொகுதியில்தான் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலும், திருவக்கரை வக்கரகாளியம்மன் கோயிலும் உள்ளன. திருவக்கரையில் தேசிய கல்மரப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

மக்களின் எதிர்பார்ப்பு

இங்கு ஏராளமான கல்குவாரிகள் இருப்பதால் அசுத்தமான காற்றையே இப்பகுதி மக்கள் சுவாசிக்கின்றனர். சுத்தமான காற்றையே இம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அருகில் புதுச்சேரி மாநிலம் இருப்பதால் பெரும்பாலும் வேலை இல்லா திண்டாட்டம் குறைவாகவே உள்ளது. ஆனாலும், சிறு கற்சிற்ப தொழிற் கூடங்களை அமைக்க வேண்டும்.

ஆங்காங்கே நிலவும் குடிநீர் சிக்கலை தீர்க்க வேண்டும்.

இயற்கை வளம் நிறைந்த பூத்துறை உள்ளிட்ட பகுதிகளை முறையாக பேணி, சமூக வெளி காடுகளை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

இயற்கை சார் வேளாண் உற்பத்தி மையங்களை அமைக்க வேண்டும்.

வெற்றி வரலாறு

இத்தொகுதியில் 7 முறை திமுகவும், 6 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

மொத்த வாக்காளர்கள்

ஆண் வாக்காளர்கள் - 1,09,930

பெண் வாக்காளர்கள் - 1,14,767

திருநங்கைகள் - 16

மொத்த வாக்காளர்கள் - 2,25,713

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x