Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
பண்ருட்டி
முந்திரி சாகுபடி அதிகம் நடைபெறும் பண்ருட்டி சென்னை-கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ளது. வளமான செம்மண் பூமியை கொண்டது. மிகவும் பின்தங்கிய பகுதி. பழமை வாய்ந்த திருவதிகை வீரட்டானஸ்வரர் கோயில் உள்ளது.ஒரு அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளது.விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்கான மையமாக பண்ருட்டி திகழ்வதால், மாவட்டத்திலேயே மொத்த வியாபாரத்திற்கான சிறப்பு மையமாகவும் திகழ்கிறது.
மரம் சார்ந்த கைவினைப் பொருள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளின் பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது
2011-ல் நடைபெற்ற தொகுதி மறு சீரமைப்பின் பண்ருட்டி ஒன்றியத்தைச் காடாம்புலியூர், பேர்பெரியான்குப்பம், பணிக்கன்குப்பம், மருங்கூர் உள்ளிட்ட ஊராட்சிகள் நெய்வேலித் தொகுதிக்கு இடம்பெயர்ந்ததால், பணிக்கன்குப்பத்தில் அமைந்துள்ள அரசு பொறியியல் கல்லூரி பண்ருட்டி வாசிகளுக்கே அதிகம் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில் நெல்லிக்குப்பம் தொகுதியிலிருந்த நகராட்சி, மற்றும் வருவாய் கிராமங்கள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டதால், இத்தொகுதியில் பண்ருட்டி, அண்ணாகிராமம் என இரு ஒன்றியங்களும், பண்ருட்டி மற்றும் நெல்லிக்குப்பம் என நகராட்சிகளும் மேல்பட்டாம்பாக்கம் மற்றும் தொரப்பாடி பேரூராட்சியும் உள்ளது.
இத்தொகுதியின் வழியாக செல்லும் தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறு மணல் வணிகத்தில் அரசுக்கு வருவாய் ஈட்டித் தருகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகள்
பெரு முதலீட்டிலான தொழில் நிறுவனங்கள் இல்லாததால் பெரும்பாலானோர் தினக் கூலிகளாகவே தொடர்கின்றனர். கட்டுமானத் தொழிலாளர்களும் கணிசமாக உள்ளனர்.
அடிக்கடி இயற்கை சீற்றத்துக்கு ஆளாகி வருவது தொடர்கிறது. 2011-ல் ஏற்பட்ட தானே புயல், 2015-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தாக்கம் இன்றும் இருக்கிறது.
மணல் குவாரிகளால் இப்பகுதியில் நீர்வள ஆதாரம் குறைந்து கொண்டே செல்கிறது.
கிராமச் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் சீர்செய்யப்படாமல் உள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை சரி செய்ய வேண்டும். முந்திரி உள்ளிட்ட வேளாண் சார்ந்த உற்பத்தி கூடங்கள் அமைக்க வேண்டும்.
வெற்றி வரலாறு
பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதியில் 1952 முதல் 2016-ம் ஆண்டு வரை நடந்த 14 தேர்தல்களில் அதிமுக 4 முறையும்,திமுக, பாமக தலா 3 முறையும், காங்கிரஸ், தேமுதிக மற்றும் சுயேச்சை உள்ளிட்டவை தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
வாக்காளர்கள்
ஆண் - 1,16,002
பெண் - 1,21,992
மூன்றாம் பாலினத்தவர் - 19
மொத்த வாக்காளர்கள் - 2,38,013
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT