Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
நெய்வேலி
தொகுதி சீரமைப்பிற்கு பின், கடந்த 2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பண்ருட்டி சட்டமன்ற தொகுதியின் ஒரு பாதியும், குறிஞ்சிப்பாடி தொகுதியின் மற்றொரு பகுதியும் உள்ளடக்கிய தொகுதியாக உருவானது நெய்வேலி. நெய்வேலி நகரியம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 38 ஊராட்சிகள் இந்த தொகுதியில் உள்ளது.
தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரம், கேரளம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட தென் இந்தியாவிற்கே மின்சாரம் வழங்கி வரும் மத்திய அரசின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் இந்த தொகுதியில் உள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பு
என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தப்படுத்தப்படவில்லை.
வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய வேலை வாய்ப்பு மற்றும் இழப்பீடு வழங்கப்படவில்லை.
கிராமங்களில் குடிநீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக உள்ளது.
வெற்றி வரலாறு
2011-அதிமுக கடந்த 2016-ம் ஆண்டில் திமுக வெற்றி பெற்றது.
வாக்காளர்கள்
ஆண் வாக்காளர்கள் - 1,08,936
பெண் வாக்களார்கள் - 1,08,935
திருநங்கைகள் - 17
மொத்த வாக்காளர்கள் - 2,17,888
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT