Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM

உளுந்தூர்பேட்டைதென்பெண்ணை, மலட்டாறு, கோரையாறு, கெடிலம் உள்ளிட்ட 4 ஆறு கள் உள்ளதால் முழுமையாக விவசாயத்தையே நம்பி இருக்கிறது இந்த தொகுதி

உளுந்தூர்பேட்டை

தென்பெண்ணை, மலட்டாறு, கோரையாறு, கெடிலம் உள்ளிட்ட 4 ஆறு கள் உள்ளதால் முழுமையாக விவசாயத்தையே நம்பி இருக்கிறது இந்த தொகுதி. பொதுப்பணி துறைக்கு சொந்தமான 85 பெரிய ஏரிகள் இருப்பதால் மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக கரும்பு மற்றும் நெல் ஆகிய பயிர்கள் மட்டுமே அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தொகுதி முழுக்க விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது. திருநங்கைகளின் வழிபாட்டுக்குரிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் இங்கு தான் உள்ளது.

உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 கிராம ஊராட்சிகள், திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சிகள் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள் என மொத்தம் 121 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மக்களின் எதிர்பார்ப்புகள்

உளுந்தூர்பேட்டை தொகுதியில் இருந்து ஆண்டுக்கு சராசரியாக 12,000 மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை முடித்து விட்டு உயர்கல்வி படிக்க செல்கின்றனர். ஆனால் உளுந்தூர்பேட்டை தொகுதியில் இதுவரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி இல்லை என்ற குறைபாடு நிலவுகிறது.

வெற்றி வரலாறு

இதுவரை இந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 3 முறை, திமுக 6 முறை, அதிமுக 5 முறை, சுதந்திரா கட்சி ஒருமுறை (1962) வெற்றி பெற்றுள்ளது.

வாக்காளர்கள்

ஆண்கள் - 1,47,666

பெண்கள் - 1,45,115

திருநங்கைகள் - 48

மொத்த வாக்காளர்கள் - 2,92,2829

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x