Published : 21 Mar 2021 03:15 AM
Last Updated : 21 Mar 2021 03:15 AM
தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொதுப் பார்வையாளர்களாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த மூத்த இந்திய ஆட்சிப்பணியாளர்களும், செலவின பார்வையாளர்களாக இந்திய வருவாய் பணி அலுவலர்களும் நியமிக்கப்பட்டு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை பயணியர் மாளிகையில் தங்கி உள்ளனர்.
பெரியகுளம்(தனி), போடி நாயக்கனூர் தொகுதிகளுக்கு பொதுப் பார்வையாளராக பிரபுடட்டாடேவிட் பிரதான் என்பவரை 9442600380 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பார்வையாளர்கள் நேரில் சந்திக்க மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி, கம்பத்திற்கு ரவீந்தரை 9442600379 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாலை 4 முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் இவரை நேரில் சந்திக்கலாம்.
ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதிகளுக்கு செலவினப் பார்வையாளர் கிலானிபாஷாவை 9442600373 என்ற எண்ணிலும், போடி, கம்பம் தொகுதி செலவினப் பார்வையாளராக மனாஸ்மண்டோலை 9442600374 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பார்வையாளர்கள் மாலை 4 முதல் 5 மணி வரை இவரை சந்திக்கலாம். இதே போல் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒன்றிணைந்து காவல்துறை பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டாவாஷெர்பாவை 9442600378 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் தொடர்பான புகார்கள் எதுவும் இருந்தால் உடன் மொபைலில் இவர்களிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஷெச்.கிருஷ்ணன்உன்னி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT