Published : 14 Mar 2021 03:15 AM
Last Updated : 14 Mar 2021 03:15 AM
திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பிட்ட தொகுதிகளை எதிர்பார்த்து கிடைக்காததால் திமுக, காங்கிரஸ், பா.ஜ., கட்சியினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் என ஏழு தொகுதிகள் உள்ளன. இதில் இந்தமுறை ஏழு தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். குறிப்பாக திண்டுக்கல் தொகுதியில்அதிமுக அமைச்சரை எதிர்த்து திமுகவே இந்தமுறை போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு திமுகவினரிடையே இருந்தது.
ஆனால் திண்டுக்கல் தொகுதி கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் திண்டுக்கல் தொகுதி திமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர். இதேபோல் நிலக்கோட்டை தொகுதியில் கடந்தமுறை நடந்த இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டதால் இந்தமுறையும் திமுக வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணிக் கட்சியான மக்கள் விடுதலை கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர்.
நிலக்கோட்டை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு அதில் முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் பேத்தியும், மகிளா காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவியுமான ஜான்சிராணி போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சியினர் தெரிவித்துவந்த நிலையில், தொகுதியை கட்சித் தலைமை பெற்றுத்தரவில்லை என காங்கிரசார் நிலக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலக்கோட்டை தொகுதியை காங்கிரசுக்கு பெற்றுத் தராததால் அக்கட்சியினர் ஏமாற்றமடைந்தனர்.
பழநி தொகுதியில் பாரதிய ஜனதா போட்டியிடும் என வேல் யாத்திரையின்போதே கட்சித் தலைவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து தேர்தல் ஆரம்பகட்ட பணிகளாக தேர்தல் அலுவலகத்தை மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூட்டணி தொகுதி பங்கீட்டிற்கு முன்னரே திறந்து வைத்தார்.
தொகுதியில் பிரச்சாரத்தில் தீவிரம் காட்ட பாரதிய ஜனதா கட்சியினர் முற்பட்ட நிலையில், பழநி தொகுதி ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது.
பிரச்சாரத்தில் தீவிரம் காட்ட முற்பட்ட நிலையில், பழநி தொகுதி ஒதுக்கப்படாதது பாஜகவினரிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT