Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM

தேங்காய் மகசூலை அதிகரிக்க தென்னை மரத்துக்கு டானிக் : பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி தகவல்

பெரியகுளம்

மகசூல் பாதிக்கிறது. இதனை சரி செய்வதற்கான தென்னை டானிக் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் வி்ற்பனை செய்யப்படுகிறது.

இதில் பயிர் வளர்ச்சி ஊக்கிகள், பேரூட்டம், நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன. அடர்திரவமாக 1, 2, 5, 10 மற்றும் 20 லிட்டர் பிளாஸ்டிக் கேன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 1 லிட்டர் அடர் திரவத்துடன் 4 லிட்டர் நல்ல தண்ணீர் சேர்த்து 5 லிட்டர் டானிக்காக தயாரித்து அதில் இருந்து 200 மிலி. வீதம் பாலிதீன் பையில் ஊற்றி 25 மரங்களுக்குச் செலுத்தலாம்.

மரத்தில் இருந்து 2 அடி தூரத்தில் சுமார் 4 அங்குல ஆழத்தில் உறிஞ்சும் வேர்கள் அமைந்திருக்கும். இந்தப் பகுதியில் மண் பறித்து, பென்சில் கனமுற்ற வெள்ளைநிற வேர் ஒன்றை தேர்வு செய்து அதன் நுனியை மட்டும் கத்தி அல்லது பிளேடு மூலம் சாய்வாக சீவ வேண்டும். பின்பு டானிக் உள்ள பையின் அடிவரைவேரை நுழைத்து நூலால் கட்டி, டானிக் சிந்தாமல் மண்ணை மூடி விட வேண்டும்.

மண்ணின் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும். வெயில் நேரத்திலும், மழை அல்லது பாசனத்திற்கு முன்பும் இவற்றை கட்டிவிட்டால் வேர் விரைவாக உறிஞ்சிவிடும். ஒரு மணி நேரத்தில்சுலபமாக 20 மரங்களுக்கு டானிக் கட்டி விடலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை ஒரு பாக்கெட் (200 மி.லி)டானிக்கை வேர் மூலம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் குரும்பை உதிர்தல் தடுக்கப்படுகிறது. அதிக மகசூல், தேங்காய் பருப்பு தடிமன், எண்ணெய் சத்து ஆகியவை கிடைக்கும். பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் விபரங்களுக்கு பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரிக்கு நேரிலோ அல்லது (04546) 231726 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று இயற்கை வள மேலாண்மைத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x