Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
மானாமதுரை(தனி) தொகுதி அமமுக வேட்பாளராக எஸ்.மாரியப்பன் கென்னடி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளராக இருந்த இவர், 2016-ல் நடந்த தேர்தலில் இத் தொகு தியில் வென்றார்.
டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் தகுதி நீக்கம் செய் யப்பட்டார். அமமுகவில் இணைந்த அவர், அம்மா பேரவை செயலாளர், செய்தி தொடர்பாளராக உள்ளார். 2019-ல் நடந்த மானாமதுரை இடைத்தேர்தலில் தோற்றார். இந்நிலை யில் மீண்டும் அமமுக சார்பில் 3-வது முறையாக மானாமதுரையில் களமிறங்குகிறார். 45 வயதான இவர் பி.ஏ படித்துள்ளார். இவருக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன் திவாகர்(11) , மகள் ஐஸ்வர்யா (1) உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT