Published : 14 Mar 2021 03:16 AM
Last Updated : 14 Mar 2021 03:16 AM
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி அமமுக வேட்பாளராக அக்கட்சி மாவட்டச் செயலாளர் தேர்போகி பாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சென்னையில் இருந்து காரைக்குடி வந்த அவருக்கு, ஆவு டைபொய்கை பகுதியில் அமமு கவினர் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து காரைக்குடி கொப் படையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவர் வருமானவரி அலுவலகம் அருகே கட்சி தேர்தல் அலுவலகம் திறந்து வைத்து ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
அதேபோல் சிவகங்கை தொகுதி அமமுக வேட்பாளராக மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் கே.அன்பரசன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று சென்னையில் இருந்து சிவகங்கை வந்த அவருக்கு அக்கட்சியினர் சிறப்பாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து வேட்பாளர் மற்றும் அமமுகவினர் சிவகங்கையின் முக்கிய வீதிகளில் கார், இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து வேட்பாளர் அன்பரசன் மஜித்ரோட்டில் கட்சி தேர்தல் அலு வலகத்தை திறந்து வைத்து ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத் தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT